அவுட்டோர் ஷூட்டிங்..நடிகைகளை ஒளிந்து நின்று பார்த்த மூத்த நடிகர்!! அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..
பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு
சினிமாவில் நடக்கும் பல விஷயங்களை பேட்டிகளில் பகிர்ந்து பிரபலமாகி வருபவர் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் இரண்டு நடிகர்களின் சீக்ரெட் பற்றி பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் டாப் இடத்தில் நடித்து வந்த நடிகர் தற்போது அக்கடதேசத்தில் வில்லன் ரோல் உட்பட பல ரோலில் நடித்து வருகிறார். தற்போது ஹைதராபாத்திலேயே செட்டிலாகி அந்த நடிகரை, ஹைதராபாத் பள்ளியின் தாளாலர் சந்திக்க சென்றுள்ளார். அப்போது அந்த நடிகரிடம் பள்ளிக்கு அழைப்பு விடுத்து போதை அருந்துவது தவறு என்று அறிவுரை கூற கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நடிகர், நான் மது அருந்தி வந்தேன், தற்போது குறைத்துக்கொண்டாலும், அதைவிடமுடியவில்லை. அப்படி இருக்கும் நான் எப்படி மாணவர்களுக்கு அறிவுரை கூறமுடியும் என்று வெளிப்படையாக கூறிவிட்டார். அப்படி இருக்கும் ஒரு நடிகர் மத்தியில், இன்னொரு மூத்த நடிகர் வேறுமாதிரி இருக்கிறார் என்று கூறியுள்ளார் செய்யாறு பாலு.
மூத்த நடிகரின் மறுபக்கம்
அதாவது மூத்த நடிகர் ஒருவர் மேடைக்கு மேடைக்கு அறிவுரை கூறி வந்தார். அந்த சமயத்தில் ஒரு நடிகையை சந்தித்து அந்த மூத்த நடிகர் பற்றி பேசினேன். அப்போது அந்த நடிகையின் முகமே மாறி, என்னிடம் ஒரு விஷயத்தை கூறினார்.
உங்களுக்கு நடிகரின் ஒரு பக்கம் தான் தெரியும், அவரின் மறுபக்கம் முழுமையாக தெரியாது. ஒருமுறை நானும் இன்னொரு நடிகையும் அவர் படத்தில் அவுட்டோர் ஷூட்டிங் சென்றிருந்தோம். அங்கு பாத்ரூம் இல்லை என்பதால இயற்கை உபாதைக்காக இருவரும் வெளியே வந்தோம்.
அப்போது அந்த நடிகர் எங்களை ஒளிந்திருந்து பார்த்தை நான் கண்டுபிடித்துவிட்டோம். அப்போது அந்த நடிகர் மீது வைத்த 100 சதவீத மரியாதை பூஜ்யத்துக்கு வந்துவிட்டது என்று அந்த நடிகை தன்னிடம் கூறியதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.