ரூம் போட சொன்ன பிரபல நடிகை..நாய்க்கும் ஏசி ரூமாம்!! கொந்தளித்த தயாரிப்பாளர்..
பாலாஜி பிரபு
தமிழ் சினிமாவில் தான் எதிர்கொண்ட சில சம்பவங்களை தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதில், பல நடிகைகள் ஸ்டார் ஓட்டல் தான் வேண்டும் என்று ரூம் போட சொல்வார்கள்.
அதிலும் நடிகைகள், ஸ்டார் ஓட்டலில் சாப்பாடு, சேப்பாக்கத்தில் இருக்கும் நாயர் மெஸ்ஸில் உள்ள நெய்யால் பொறித்த மீன் தான் வேண்டும் என்று கேட்பார்கள். அதற்கான ஒரு பிரொடக்ஷன், ஒரு கார், அதுக்கு ஒரு நபர், கேரியர்களை எடுத்துட்டு போய் வரணும்.
நாய்க்கு ஒரு ஏசி ரூம்
அதேபோல் ஒரு பிரபல நடிகை ஒருவர் அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு தான் வளர்க்கும் நாயை கூட்டிட்டு ஃபிளைட்டில் வருவார்.
அதற்கும் டிக்கெட் போடணும், அந்த நாய்க்கு 5 ஸ்டார் ஓட்டலில் ஏசி ரூம் போடணும். நடிகைக்கு ஒரு ரூம், நாய்க்கு ஒரு ஏசி ரூம் போடணும். நடிகர், நடிகைகள் பிரமோஷனுக்கு கூப்பிட்டால் 2, 3 லட்சம் தந்துடணும் என்று கேட்கிறார்கள்.
எல்லாமே இப்படி வியாபாரமா செய்ய ஆரம்பித்துவிட்டால் தயாரிப்பாளர்களின் காசை கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கினால் எப்படி ஒரு தயாரிப்பாளர் நல்லபடியாக படம் எடுத்து முடிப்பார்? இந்த செலவுகள் தான் கடைசியில் நிதிப்பிரச்சனையாக மாறுகிறது என்று புலம்பி இருக்கிறார் பாலாஜி பிரபு.