இயக்குனரை ரகசிய திருமணம் செய்த சூர்யா பட நடிகை!! கணவர் சித்ரவதையால் கதறும் நிலை
நடிகைகள் சினிமாவில் தங்களுடைய மார்க்கெட் இல்லாமல் போனால் அப்படியே காணாம போய்விடுவார்கள். அதன்பின் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் போய்விடும்.

அப்படி நடிகர் சூர்யா, ஆர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் தான் தான்யா பாலகிருஷ்ணா.
இவர் சமீபத்தில் பிரபல இயக்குனர் பாலாஜி மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. இதை உறுதிபடுத்தும் வண்ணம் தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் உண்மையை கூறியிருக்கிறார்.

அதில், நடிகை தான்யா இயக்குனர் பாலாஜி மோகனை ரகசியமாக சில வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாகவும் ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், திருமணம் குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வருகிறார்கள். தான்யா படத்தின் பிரமோஷனுக்கு கூட கணவர் அவரை வெளியேவிடுவதில்லை என்றும் கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பின் தான்யா எனக்கு தொலைப்பேசியில் பேச முயற்சி செய்ததாகவும் என்னை மிரட்ட பார்ப்பதாகவும் கல்பிகா குற்றம் சாட்டியுள்ளார். அவர் பேசிய வீடியோவை கூட யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டும் இருக்கிறது என தெரிவித்துள்ளார் நடிகை கல்பிகா கணேஷ்.