விவாகரத்துக்கு பின் மாமானாருடன் போட்டி போடும் சமந்தா! பெரிய தலைக்கிட்ட மாட்டுவாரா?
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்தவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த சமந்தா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு பிரிந்தார்.
அதன்பின் படங்களில் சுதந்திரமாக நடித்தும் தாராளமான போட்டோஷூட்டினையும் பகிர்ந்து வருகிறார். தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கிலும் பிக்பாஸ் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6வது சீசன் மிக விரைவில் தொடங்க உள்ளது.
நாகர்ஜுனா, பட வேலைகளில் பிஸியாக உள்ளதால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழ்நிலை, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்களாம் .
இந்நிலையில் தற்போது மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சமந்தா தொகுத்து வழங்க சம்மதிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.