செல்ஃபி கேட்டு நடிகைக்கு முத்தமிட்டு ஓடிய ரசிகர்!! ஷாக்கான அக்ஷய் குமார்..
அக்ஷய் குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் பிரபலங்களை பார்த்தால் ரசிகர்கள் செல்ஃபி கேட்கும் காலம் இது. ரசிகர்களை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று அக்ஷய் குமாரிடம் கேட்கப்பட்டது.
தூரத்தில் இருந்து நடிகர்கள், நடிகைகள் புகைப்படம் எடுப்பதைவிட உங்களுடன் ஒரு செல்ஃபி எடுக்கலாமா என்று கேட்கபர்களை எனக்கு பிடிக்கும் என்றும் அனுமதி கேட்டுவிட்டு செல்ஃபி எடுப்பது நல்லது ஆனால் அனுமதி இல்லாமல் புகைபடங்க்ள் எடுப்பது நல்லது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு நடிகையின் பெயரை சொல்லமாட்டேன் என்று கூறி, ஒரு ஹீரோயின் என் அருகில் தான் அந்த சம்பவம் நடந்தது. இரு வாலிபர்கள் வந்து உங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கலாமா என்று ரொம்ப நல்லபடியாக நடிகையிடம் கேட்டனர். அவரும் சரி என்றார்.
நடிகைக்கு முத்தம்
ஒருவன் 1, 2 , 3 என்று சொல்ல மற்றொரு பையன் அந்த நடிகைக்கு முத்தம் கொடுத்துவிட்டு ஒரு பக்கம் ஓடிவிட்டார். அவருடன் வந்த நபரும் ஓடிவிட்டார். யாரை முதலில் பிடிப்பது என்ற குழப்பத்தில் இரண்டு பேரும் தப்பியோடிவிட்டனர்.
அந்த புகைப்படத்தை போஸ்ட் செய்து நான் யாருக்கு முத்தம் கொடுத்து இருக்கிறேன் என்று பாருங்கள், உங்களால் முடியுமா என்று கேட்பார்கள், அவர்களின் திட்டத்தை பாருங்களேன் என்று அக்ஷய் குமார் கூறியிருக்கிறார். அந்த நடிகை யார் என்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.