மக்கள் அவதிப்படும் நேரத்தில் இந்த விளம்பரம் தேவையா.... நயன்தாராவை திட்டும் ரசிகர்கள்

Nayanthara Michaung Cyclone
By Yathrika Dec 07, 2023 11:45 AM GMT
Report

நயன்தாரா

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவருமே தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். தனியார் நிறுவனங்கள், பிரபலங்கள் என அவரவர் தங்களால் முடிந்த உதவிகள் செய்கிறார்கள். 

அப்படி நடிகை நயன்தாராவும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் கொடுத்து உதவி செய்கிறார். 

அவர் சார்பாக உதவி செய்தவர்கள் அவர் புதியதாக தொழில் தொடங்கிய Femi9 பிரான்ட் பெயரோடு உதவியுள்ளனர். இதைப்பார்த்த சிலர் அவன்அவன் தண்ணி, தூக்கம், வீடு இல்லாமல் இருக்கிறான் இதில் இவர்களுக்கு தொழிலின் விளம்பரம் தேவையா என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

மக்கள் அவதிப்படும் நேரத்தில் இந்த விளம்பரம் தேவையா.... நயன்தாராவை திட்டும் ரசிகர்கள் | Fans About Actress Nayanthara Help