கணவர் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்கிறாராம்.. கொந்தளிக்கும் நடிகை நயன்தாரா ரசிகர்கள்.
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. நானும் ரவுடி தான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த நயன் தாரா, அவரை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் நெருக்கமாகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.
அதன்பின் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் தங்கள் அன்பை புகைப்படங்கள் வாயிலாக தெரிவித்து வந்தனர். திருமணம் முடிந்து 4 மாதமாகிப்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர்.
இதன்பின் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த நயன் தாரா, தன் கணவரை நம்பி அஜித் படத்தில் வாய்ப்பு கேட்டு சிபாரிசு செய்ததின் பெயரி 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் அதை சரியாக பயன்படுத்தாமல் ஊதாரியாக இருந்து கோட்டை விட்டுவிட்டார்.
இதனால் மன குழப்பத்தில் நயன் தாரா இருந்து வந்தார் என்றும் கூறப்பட்டது. அதேசமயம் அடுத்தடுத்த படங்களில் நயன் கமிட்டாகி அதற்கான அட்வான்ஸ் தொகையையும் பெற்று வந்தார். இந்நிலையில் நயன் தாரா கமிட்டாகிய இரு படங்களில் இருந்தும் விலக்கப்பட்டு 20 கோடி ரூபாயை இழந்துள்ளாராம். இதற்கெல்லாம் காரணம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நேரம் சரியில்லை என ஜோதிடரும் கூறியிருக்கிறாராம்.
இதனால் கடுப்பாகிய நயன், 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்யவும் முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை நயன் தாரா, விக்னேஷ் சிவனை ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்தவர். அவருக்காக பல விசயங்களை விக்னேஷ் சிவன் செய்திருக்கிறார்.
அதனால் தேவையில்லாத குழப்பத்தை பரப்ப வேண்டாம் என்றும் வதந்திகளை கிளப்ப ஒரு அளவில்லையா என்று நயன் ரசிகர்கள் கொந்தளித்து கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இப்படியொரு வதந்தி பரவுவதை கண்டுகொள்ளாத விக்னேஷ் சிவன் தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிக்கு பழி வாங்க பல பிளான்களை போட்டும், இணையத்தில் கருத்துக்களை கூறி பதிவிட்டும் வருகிறாராம்.