இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது.. கணவர் மறைவிற்கு பின் நடிகை மீனா எடுத்த அதிரடி முடிவு..

Meena Rambha Kushboo
By Edward Aug 16, 2022 06:03 AM GMT
Report

90ஸ் கிட்களின் கனவுக்கன்னியாக இருந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மீனா. குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மீனா 2009ல் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த மீனா, கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் கடந்த மாதம் மீனாவின் கணவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புறாக்களின் எச்சம் கலந்த காற்றால் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் தமிழ் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது. சுவாச பிரச்சனைக்காக தன் கணவர் மரணமடைந்ததால் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு அளிக்கும் வண்ணம் உடல் உறுப்பு தானம் செய்ததாக செய்தியை வெளியிட்டுள்ளார் மீனா.

என் கண்வருக்கு ஒரு நன்கரையாளர் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை மாறியிருக்கும். அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் என்று கூறி பதிவினை பகிர்ந்துள்ளார்.

தற்போது மீனா தன் கணவரின் மரண சோகத்தில் இருந்து வெளியே வர அவரது தோழி நடிகைகள் பீச், அவுட்டிங் என கூட்டிச்சென்று வருகிறார்கள். நடிகை ரம்பா கூட இதற்காக வெளிநாட்டில் இருந்து மீனாவிற்காக நேரத்தினை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.