தோற்ற மேட்ச் கொண்டாடும் தோனி ரசிகர்கள், இதெல்லாம் அசிங்கம் தெரியுமா
ஐபிஎல் போட்டி இந்தியாவில் தொடங்கிவிட்டது என்றாலே எந்த பிரச்சனையும் மக்கள் கண்களுக்கு தெரியாமல் போய் விடும். அந்த அளவிற்கு IPL மோகத்தில் மக்கள் இருப்பார்கள்.
இந்நிலையில் நேற்று நடந்த Csk Vs DC மேட்சில் ஒரு மிகப்பெரிய ரன் சேஸை CSK துரத்த, தோனி எப்போதும் இல்லாமல் இந்த முறை ஒரு வழியாக களம் இறங்கி விட்டார். ஆனால், ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய தோனி, வழக்கம் போல சில Ball-களை சாப்பிடவும் ஆரம்பித்தார். 18 ஓவரில் 3 சிக்ஸ் அடித்திருந்தால் ஈஸியாக வெற்றி பெற்று இருக்கலாம்.
ஆனால், போன IPL ல் வெற்றி தேடி தந்த ஜடேஜாவை வைத்துக்கொண்டு தோனி ஒரு ரன் கூட ஓடாமல் டொக் வைத்து கொண்டு 19வது ஓவரில் இரண்டு போர், சிக்ஸ் அடித்து ரசிகர்களிடம் ஆரவாரத்தை அள்ளி சென்றார்.
ரசிகர்களும் 18 ஓவரில் நடந்ததை மறந்து தோனியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இதெல்லாம் எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா, இதே பைனல் மேட்ச் அல்லது நாக் அவுட் என்றாலும் இப்படி சந்தோஷப்படுவீர்களா என சில ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.