டைரக்டர் படம் ஒழுங்காக எடுக்காததுக்கு பூஜா ஹெட்ஜ் ராசியில்லாத நடிகையா, கொந்தளித்த நெட்டிசன்கள்
பூஜா ஹெட்ஜ்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் பூஜா ஜெட்ஜ். இவர் தமிழ், தெலுங்கு தாண்டி தற்போது ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அதிலும் இளம் நடிகர் வருன் தவானுக்கு ஜோடியாக இவர் ஒரு படத்தில் நடித்து வருவது பாலிவுட்டில் எல்லோரும் எதிர்ப்பார்க்கும் படமாக உள்ளது.
அதோடு அக்ஷய் குமார் ஹவுஸ்புல் 5 படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பூஜா கடைசியாக நடித்த 5 படங்களுக்கு மேல் தோல்வி, இதனால் ராசியில்லாத நடிகை என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பூஜா ரசிகர்கள் தாண்டி பலரும் தங்கள் கருத்துக்களை கண்டனமாக தெரிவித்து வருகின்றனர்.
ஒரு படம் ஓடுவது என்பது அந்த இயக்குனர் திறமையை பொறுத்தது, அவர்கள் படம் ஒழுங்காக எடுக்காமல் ஹீரோயின் மீது பழியை போடுவது எந்த விதத்தில் நியாயம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.