விடாது துறத்தி செல்ஃப்! பொது இடத்தில் ரசிகரால் சங்கடத்தில் சிக்கிய நடிகை பூஜா ஹெக்டே
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் நடிகர் ஜீவாவுடன் ஜோடிப்போட்டு நடித்து அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படத்திற்கு பின் தமிழ் படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் போக தெலுங்கு பக்கம் சென்றார்.
தற்போது தெலுங்கு பக்கம் முன்னணி நடிகை என்ற லிஸ்ட்டில் இருக்கும் பூஜா சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அவர் கமிட்டாகிய அடுத்த நாளே பூஜா ஹெக்டேவை தமிழ் ரசிகர்கள் பல லட்சம் பேர் பாலோ செய்து வந்தனர்.
சமீபத்தில் பீஸ்ட் படத்தின் புகைப்படங்கள் பாடல்கல் வெளியாகியதால் பூஜா மிகப்பெரிய வரவேற்பு பெறுவார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. அதிலும் அவர் போட்டும் பிகினி போட்டோஷூட் பல லட்சம் லைக்குகள் வர விஜய் ரசிகர்களும் ஒரு காரணம்.
இந்நிலையில் பூஜா ஹெக்டே தனது உடற்பயிற்சியை செய்து விட்டு வீட்டிற்கு செல்ல காரை எடுக்க சென்றுள்ளார். அங்கிருந்த ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க கூப்பிட்டு பூஜாவும் எடுத்து கொண்டார். பின் அந்த ரசிகர் பூஜா ஹெக்டேவை விடாது நெருக்கமாக செல்ல முற்பட்டார்.

பின் அங்கிருந்த கேமராமேன்கள் விலக சொல்லி அதன்பின் பூஜா ஹெக்டே காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அப்படி என்ன செய்துவிட்டார் அந்த ரசிகர் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.