போதும் இதுக்கு மேல வேண்டாம்.. பாக்க முடியலமா! புலம்பும் ரசிகர்கள்
பிக்பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் பிக் பாஸ் வந்ததால் மிகப்பெரிய அளவில் பாப்புலர்ஆனார். அவருக்கு அதிகம் அளவு ரசிகர் கூட்டமும் கிடைத்திருக்கிறது.
அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கிய லாஸ்லியா தற்போது பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் பிஸியாக இருந்து வரும் அவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் லாஸ்லியா அதிக அளவு உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சி ஆக மாறி இருக்கும் ஸ்டில் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவரது உடம்பில் ஏதேனும் பிரச்சனையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இதுக்கு மேல உடம்பை குறைக்காதீங்க, பிக் பாஸில் இருந்தது போன்ற லாஸ்லியா தான் வேண்டும் என நெட்டிசன்கள் அட்வைஸ் கூறி வருகின்றனர்.
