திரிஷாவிடம் கைது ஆக துடிக்கும் ரசிகர்கள்.. காரணம் இதுதானா
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. தொடர்ந்து முன்னணியில் இருந்த நடிகை திரிஷா நடுவில் கொஞ்சம் மார்க்கெட்டில் சரிகினாலும், 96 படத்தின் மூலம் மீண்டும் ஜொலிக்க துவங்கினார்.
தற்போது இவர் நடிப்பில் கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்கள் உருவாகி, கூடிய விரைவில் வெளியாக காத்து இருக்கிறது. அதுமட்மின்றி மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா.
நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களால் வைரலாகும். அந்த வகையில் தற்போது தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட நடிகை திரிஷா, போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒண்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்களை கைது செய்யுங்கள் மேடம் என்று மீம் போட்டு வருகிறார்கள்.