அங்க ஒரு குடும்பம் அழுத்துக்கிட்டு இருக்கு, நீ தின்னுகிட்டே இருக்க.. இர்பானை திட்டித்திற்கும் ரசிகர்கள்!
youtube பிரபலம் மற்றும் உணவு விமர்சகராக இருப்பவர் தான் இர்பான். இவர் நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து அவர்களுடன் உரையாடி தன்னுடைய youtube சேனலில் பதிவிட்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு இவருக்கு பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்தனர்.
சமீபத்தில் இர்பானின் கார் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஊரில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 55 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
முதலில் அந்த காரில் இர்பான் பயணிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் விபத்துக்கு உள்ளன சமயத்தில் அந்த காரில் இர்பான் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது இர்பான் தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் உணவை விமர்சித்து வீடியோ பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அங்க ஒரு குடும்பம் அழுத்துக்கிட்டு இருக்கு.. நீ தின்னுகிட்டே இருக்க என்று கமன்ட் செய்துள்ளனர்.