அடுத்த பாரதி கண்ணம்மா.. ஓயாமல் ரசிகர்களை கடுப்பேற்றும் விஜய் டிவி

vijay tv serial bharathi kannama mouna raagam
By Kathick Apr 18, 2022 11:30 AM GMT
Report

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் வரும் ஒவ்வொரு சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த ரசிகர்கள் பட்டாளத்தை வேண்டுமன்றே கடுப்பேற்ற வேலை பார்த்து வருகிறது விஜய் டிவி.

ஆம், முதலில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் தீடீரென கணவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் கண்ணம்மா, கையில் ஒரு பையுடன் உலகம் முழுக்கு நடந்து வந்தார்.

இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அதனை வெச்சு செய்தனர். இதன்பின், தற்போது மீண்டும் அடுத்த பாரதி கண்ணம்மா என்று ரசிகர்கள் கலாய்க்கும் அளவிற்கு மௌன ராகம் சீரியலை கொண்டு வந்துள்ளனர். ஆம், கண்ணம்மா எப்படி பாரதியிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறினாரோ.

அதே போல் தனது கணவர் வருணுடன் சண்டை போட்டுவிட்டு, ஒரே ஒரு பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் சக்தி. இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், மௌன ராகம் சீரியலில் செமயாக கலாய்த்து வருகிறார்கள்.