விஜய்யின் ஃபிளாப்பால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட யோகிபாபு! அடுத்த இயக்குனரும் இவர் தானாம்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகிபாபு. துணை நடிகராக முதலில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தற்போது ஒரு நாளை லட்சத்திற்கு சம்பளம் வாங்கும் முன்னணி காமெடி நடிகராக மாறியுள்ளார்.
முன்னணி நடிகர்கள், நடிகைகள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் நடிகை நயன் தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் லீட் ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்திலும் நடித்து வருகிறார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் யோகிபாபு சமீபத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ள செய்தியை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே விஜய்யுடன் சர்கார், மெர்சல், பிகில், பீஸ்ட் போன்ற படத்தில் நடித்துள்ளார்.
இதனை வைத்து ஒரு ரசிகர், நீ விஜய் கூட நடிச்ச படம் மூன்று படமும் பிளாப். சர்கார் ஏஆர் முருகதாஸ் அவுட், பிகில் அட்லி அவுட், பீஸ்ட் நெல்சன் அவுட் அடுத்து தொடரும் என கூறி அசிங்கப்படுத்தி பதிவிட்டிருந்தார்.
இதற்கு யோகிபாபு நன்றிப்பா என்று கலாய்த்தபடி பதிலடி கொடுத்துள்ளார் யோகிபாபு. இதற்கு அவரது ரசிகர்களும் அந்த நபரை கண்டபடி திட்டி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.