மகள்களை சினிமாவை விட்டு ஒதுக்கியும் பள்ளத்தில் குதித்த அப்பா பிரபலங்கள்.. இந்த விசயத்தில் கமல் உசாரு தான்..

Arjun Bhagyaraj Kamal Haasan Shankar Aditi Shankar
By Edward Aug 23, 2022 05:30 PM GMT
Report

இந்திய திரையுலகில் வாரிசு கலாச்சாரம் அனைத்து மொழிகளிலும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பாலிவுட் சினிமாவில் இந்த விசயம் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. அப்படி தென்னிந்திய சினிமாவிலும் ஒருசில பிரபலங்கள் ஆண்களை மட்டுமே நடிக்க அனுமதித்து வந்தனர்.

அதன்பின் போகபோக மகள்களையும் நடிக்க வைக்கிறார்கள். அந்தவகையில் மகள்களை அறிமுகப்படுத்தி வெற்றியை கொண்டாட வயிற்றில் நெருப்பை கட்டும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இதை உடைத்தெறிந்தவர் தான் கமல் ஹாசன்.

மகள்களை சினிமாவை விட்டு ஒதுக்கியும் பள்ளத்தில் குதித்த அப்பா பிரபலங்கள்.. இந்த விசயத்தில் கமல் உசாரு தான்.. | Fathers Did Not Like Their Daughters To Act

தன் இரு மகள்கள் ஸ்ருதி, அக்‌ஷராவை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருந்தார். ஆனால் சில பிரபலங்கள் மகள்களை சினிமாவில் இருந்து ஒதுக்கி வைத்தும் அவர்களின் ஆசையால் சினிமாவிற்கு வந்தவர்களை பார்ப்போம்.

மகள்களை சினிமாவை விட்டு ஒதுக்கியும் பள்ளத்தில் குதித்த அப்பா பிரபலங்கள்.. இந்த விசயத்தில் கமல் உசாரு தான்.. | Fathers Did Not Like Their Daughters To Act

இயக்குனர் சங்கர் - பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் தன் இரு மகள்களையும் சினிமா பிடியில் இருந்து ஒதுக்கி வைத்து தான் வந்தார். மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். அதன்பின் இரண்டாம் மகள் அதிதி சங்கரை டாக்டர் படிப்பிற்கும் படிக்க வைத்திருந்தார். என்னவோ ஏதோ, அதிதி சினிமா மீது ஆசைப்பட்டு அப்பாவின் சம்மதத்துடன் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். இதில் தலையிடாமல் இருக்கும் சங்கர் மனதில் சில பயம் இருக்க தான் செய்யும்.

மகள்களை சினிமாவை விட்டு ஒதுக்கியும் பள்ளத்தில் குதித்த அப்பா பிரபலங்கள்.. இந்த விசயத்தில் கமல் உசாரு தான்.. | Fathers Did Not Like Their Daughters To Act

சரத்குமார் - முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சரத்குமார் தன் முதல் மனைவிக்கு பிறந்த மகள் வரலட்சுமியை சினிமாவில் இருந்து ஒதுக்கி தான் வைத்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தப்பின் போடா போடி படத்தில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார் வரலட்சுமி.

மகள்களை சினிமாவை விட்டு ஒதுக்கியும் பள்ளத்தில் குதித்த அப்பா பிரபலங்கள்.. இந்த விசயத்தில் கமல் உசாரு தான்.. | Fathers Did Not Like Their Daughters To Act

அர்ஜுன் - அக்‌ஷன் கிங் அர்ஜுன் தற்போது வில்லன் உள்ளிட்ட சில ரோல்களில் நடித்து வருகிறார். அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் சினிமாவில் நடிக்க வைக்க துளிக்கூட விரும்பம் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால் மகள் ஆசைப்பட்டதால் பட்டத்து யானை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க வைத்திருந்தார்.

மகள்களை சினிமாவை விட்டு ஒதுக்கியும் பள்ளத்தில் குதித்த அப்பா பிரபலங்கள்.. இந்த விசயத்தில் கமல் உசாரு தான்.. | Fathers Did Not Like Their Daughters To Act

நடிகர் அருண் பாண்டியன் - பல பரிமானங்களை பெற்று தற்போது சொந்த ஊரில் விவசாயம் பார்த்தும், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் போன்ற வேலைகளை செய்தும் வருகிறார் நடிகர் அருண் பாண்டியன். தன் மகள் கீர்த்தி பாண்டியனை படிக்க வைத்து சினிமாவில் அறிமுகப்படுத்தாமல் இருந்தார். அதன்பின் மகளின் ஆசையாக கேட்டதால் தான் அருண் பாண்டியன் தும்பா படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

மகள்களை சினிமாவை விட்டு ஒதுக்கியும் பள்ளத்தில் குதித்த அப்பா பிரபலங்கள்.. இந்த விசயத்தில் கமல் உசாரு தான்.. | Fathers Did Not Like Their Daughters To Act

இயக்குனர் பாக்யராஜ் - இயக்குனர் பாக்யராஜ் தன்னுடைய மகன் சாந்தனுவையும் மகள் சரண்யாவையும் ஒரே நேரத்தில் தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இடையில் விருப்பம் இல்லாமல் ஒருசில படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து நிறுத்தி வைத்து வெளிநாட்டு படிப்பிறகு அனுப்பி வைத்தார்.

அங்கு காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்து கொண்டார். இதன்பின் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று எங்கையும் தலைக்காட்டவிடாமல் பார்த்து வருகிறார் இயக்குனர் பாக்யராஜ்.