ஏய் நீ வருவியா வரமாட்டியா!! அதே இடத்தில் நிற்கும் ஃபெங்கல் புயல்!! கதறும் நெட்டிசன்ஸ்..
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சில நாட்களுக்கு முன் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று கூறப்பட்டது.
இதனை அடுத்து பல இடங்களில் கன மழையும், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்தனர். ஆனால், புயல் உருவாகி அதற்கு ஃபெங்கல் புயல் என்று பெயரிடப்பட்டது.
சென்னை புதுச்சேரி இடையே ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் என்று கூறிய நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் செல்லும் பாதையில் சிறிது மாற்ற ஏற்பட்டதால் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கடக்கும் என்று கூறினர்.
ஃபெங்கல் புயல்
இதனால் 29 மற்றும் 30 ஆம் தேதி புயல் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் , வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் ஃபெங்கல் புயல் அதே இடத்தில் நகராமல் நிற்கிறது என்று வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு "ஃபெங்கல்" எனப் பெயரிடப்படுகிறது #ChennaiRains #CycloneFengal pic.twitter.com/JA6NfFSuWv
— ѕαи∂у𝕏 (@ThengaChutneyy) November 26, 2024
இதனால் கடுப்பாகிய நெட்டிசன்கள், உனக்கு ஃபெங்கல்னு யார் பேரு வெச்சது, வந்தே பாரத்னு பேர மாத்தி வைங்கடா, வேகமா வராம அடிக்கடி பிரேக் டவுன் ஆகி பாதியில் நிக்குது என்று கலாய்த்து வருகிறார்கள்.