அஜித்தை அந்த மாதிரி பேசி தாக்கிய வடிவேலு.. 20 ஆண்டுகள் ஒதுக்கி வைக்க இதுதான் காரணம்..
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இதையடுத்து இவரின் 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
வடிவேலு vs அஜித்
அஜித் நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் ராஜா. இதில் ஜோதிகா, வடிவேலு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் அஜித்திற்கு மாமாவாக நடிகர் வடிவேலு நடித்திருப்பார்.
அந்த ரோலில் வடிவேலு அஜித்தை வாடா போடா என்று அழைத்திருப்பார். ஆனால் ஷூட்டிங் முடிந்த பிறகும் வடிவேலு அஜித்தை மரியாதை கொடுக்காமல் தான் பேசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த அஜித் இது குறித்து படத்தின் இயக்குனரிடம் கூறியுள்ளார்.
அதன் பிறகு இயக்குனரும் அஜித் சொன்ன விஷயத்தை வடிவேலுடன் கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகும் வடிவேலு மரியாதை இல்லாமல் தான் அழைத்தாராம்.
ராஜா படம் முடிந்த பிறகு அஜித் இனி வடிவேலுடன் நடிக்க கூடாதென்று முடிவெடுத்துள்ளார். இதனால் தான் அஜித் 20 ஆண்டுகளாக வடிவேலுவுடன் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.