தனுஷை எதிர்த்து பெரிய ஆளாகும் சிவகார்த்திகேயன்.. மோதலுக்கு இது தான் காரணமா?
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
சிவகார்த்திகேயன் சினிமாவில் முன்னேற காரணமாக இருந்தவர் தான் நடிகர் தனுஷ். ஆனால் சில காரணங்களால் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்தது.
இந்நிலையில் இவர்களின் இந்த பிரச்சனை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தனுஷ் சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்திய பின்பு அவரை வைத்து எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார்.
இதையடுத்து தனுஷ் சிவகார்த்திகேயனை தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைத்துள்ளார். இந்த விஷயத்தால் சிவகார்த்திகேயன் தனுஷ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் பக்கத்தில் சிவகார்த்திகேயன் தனக்கென சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி வருகிறாராம்.