விஜய்யை போல தந்தையை கைவிட்ட சூர்யா.. இதற்கு ஜோதிகா தான் காரணமா?
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் சினிமாவில் அறிமுகமான போது பல மோசமான விமர்சனங்களை சந்தித்து தற்போது இந்திய சினிமாவின் டாப் ஹீரோக்கள் வரிசையில் முன்னேறியுள்ளார்.
தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கும் "சூர்யா 42" படத்தில் நடித்த வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து சூர்யா பல முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.
சூர்யா - சிவகுமார்
சமீபத்தில் சூர்யா மும்பையில் புது வீடு வாங்கி குடியேறியுள்ளார். இந்த விஷயம் சூர்யாவின் அப்பா சிவகுமாருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் சூர்யாவிற்கும் சிவகுமாருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் திருமணத்திற்கு பின்பும் ஜோதிகா திரைப்படங்களில் நடித்து வருவதும் சிவகுமாருக்கு பிடிக்கவில்லையாம். இவ்வாறு பிரபல பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யும் அவரின் தந்தை எஸ். ஏ சந்திரசேகர் இடையே மோதல் தொடர்ந்து தற்போது சூர்யா மட்டும் சிவகுமார் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.