விஜய்யின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இருந்து எஸ் ஏ சி.. வெளிவந்த பல வருட ரகசியம்
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகி வருகிறது.
ஆரம்பத்தில் எஸ்.ஏ.சியின் உதவியால் விஜய் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சில ஆண்டுகளா கருத்து வேறுபாடு காரணமாக விஜய்யும் எஸ்.எ.சி பேசி கொள்வதில்லை. இது குறித்து பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் முதலில் விஜய் தான் நடிக்கவிருந்தது. ஆனால் எஸ்.ஏ.சி மற்றும் ஷங்கர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் ஷங்கர் முதல்வன் படத்தில் விஜய்க்கு பதிலாக அர்ஜுன் நடித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி ஷங்கர் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
தற்போது இந்த சம்பவத்தை வைத்து எஸ்.ஏ.சி விஜய்யின் வளர்ச்சிக்கு முற்றுக்கட்டையா இருந்தார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.