பார்க்கும் விதம்..எனக்கு தோன்றியதை நான் பண்ணுவேன்!! நடிகை ரச்சிதா ஓப்பன் டாக்
ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து பின் வெள்ளித்திரையில் கால்பதித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அவர் நடிப்பில் Fire என்ற படம் காதலர் தினத்தன்று ரிலீஸாகியது. இப்படத்தில் ரச்சிதா, படுகிளாமர் ரோலிலும் படுக்கையறை காட்சியிலும் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.
இதனையடுத்து ரச்சிதா பற்றிய தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், பிக்பாஸ் சமயத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் சொன்ன கருத்துக்கள் வைரலாகி வருகிறது.
பார்க்கும் விதம்
அதில் அவர், நான் இப்போது உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் உங்களை பார்ப்பதை கட் செய்து ஸ்லோமோஷனில் போட்டால் உங்களை நான் ரொமாண்ட்டிக்காக பார்ப்பது போல் இருக்கும், அப்படி போடவில்லை என்றால் சாதாரணமாக பார்ப்பதுபோல் இருக்கும். மற்றவர்கள் பார்க்கும் விதத்தில்தான் எல்லாமே இருக்கிறது.
இப்போது நீங்கள் பேசுவதற்கு நான் ரியாக்ட் செய்வது என்பது எனக்கு அந்த இடத்தில் தோன்றியதை செய்திருப்பேன். இதில் என்ன இருக்கிறது என்று ரச்சிதா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஃபயர் படத்தை தொடர்ந்து ரச்சிதா அப்படம் குறித்த எந்த கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.