ரஜினியுடன் இணைந்த 46 வயது பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்தது. கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் கூட வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.
கூலி திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர் 2. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜெயிலர் 2-வில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் வித்யா பாலன் தமிழில் நடிக்கும் படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.