விஜயகாந்த்தால் கொடிக்கட்டி பறந்த நடிகைகள்! ஆனால் இந்த நடிகை மட்டும் தெருகோடியிலாம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக 80, 90களில் முக்கியமாக நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். ஆரம்பகாலகட்டத்தில் கேப்டன் என்ற பெயருக்கு பொருத்தமானவராக திகழ்ந்தும் தற்போது வரை கடின உழைப்பை கொடுத்து வருகிறார். தற்போது உடல் நிலை சரியில்லாமல் சினிமாவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் விலகினார். பின் அரசியலில் இருந்து சற்று விலகியும் வருகிறார்.
இந்நிலையில் விஜயகாந்த்தால் பல நடிகைகள் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தனர். அதில் முக்கியமானவர்கள் யார் என்று தெரியுமா. கே விஜயன் இயக்கத்தில் 1980ல் வெளியான தூரத்து இடி முழங்க படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூர்ணிமா நடித்து அறிமுகமாகினார். பின் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில், விஜயகாந்த் நடிப்பில் கூலிக்காரன் படம் 1987ல் வெளியானது. இப்படத்ஹ்டில் நடிகை ரூபினி பிரியா கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
நடிகை லைலா நடிகர் விஜயகாந்தின் கள்ளழகர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகினார். கண்ணுப்பட போகுதய்யா படத்தில் அவரது காதலியாக நடித்து கரணுக்கு ஜோடியாகவும் நடித்திருப்பார்.இப்படத்தில் நடிகை ராதிகா சௌத்ரி அறிமுகமாகினார். எங்கள் அண்ணன் படத்தில் நடிகர் நமீதா விஜயகாந்த் படத்தில் அறிமுகமாகினார். தற்போது திருமணமாகி க்ளாமரில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
நடிகை பானு பிரியா விஜயகாந்துடன் ஆரம்பகால சினிமாவில் சத்ரியன், ராஜதுரை, காவியத்தலைவன், பரதன் போன்ற படங்களில் நடித்து பெரிய வெற்றியை பெற்றது. இதனால் நடிகர் விஜயகாந்தை வைத்து தயாரிக்க ஆசைப்பட்டு ஒரு படத்தினை கோடிகளில் பணம் செலுத்தி தயாரித்துள்ளார்.
அப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்துள்ளது. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்து சொத்துக்களை இழந்துள்ளார் பானு பிரியா.