உலகின் அதிக வருமானம் கொண்ட விளையாட்டு வீரர் யார் தெரியுமா? இத்தனை கோடி வருமானமா?
அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்
பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் யார் யார் எவ்வளவு சொத்து வைத்து எந்த இடங்களில் இருக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. அப்படி உலகின் மிக அதிகமான சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
அந்தவகையில் மொத்தம் 275 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் உலக கால்பந்து ஜாம்பவானும் போர்ச்சுகல் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய மதிப்பில் அவரது சொத்து மதிப்பு ரூ. 2295 கோடி.
சவுதி ப்ரோ லீக்கில் அல் நாசர் கிளப்பை பிரிதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் ரொனால்டோ பெரும் வருமானத்தை பெற்றுள்ளார். இத்தாலிய கிளப்பான ஜுவெண்டஸில் இருந்து அல் நாசருக்கு மாறியப்பின் அவரது ஆண்டு வருமானம் 200 மில்லியன் டாலரை தாண்டியது.
விளையாட்டு ரீதியாக மட்டுமின்றி வணிக ரீதியாக அதிக பணம் ஈட்டி வருகிறார் ரொனால்டோ. ரொனால்டோவின் வருவாயில் பாதிக்கும் குறைவானது தொகையுடன் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.