கையை வெச்சுகிட்டு சும்மாவே இருக்க முடியாதா நித்தி? ரஞ்சிதா போதும்னு வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம்

nithyananda kailasa
By Edward Mar 24, 2022 09:10 AM GMT
Report
325 Shares

ஆன்மீக குரு என்று கூறிக்கொண்டு பாலியல் புகார், ஆள் கடத்தல் போன்ற வழக்குகளில் சிக்கி ஜெயிலுக்கு சென்றவர் தான் நித்யானந்தா. சில வருடங்களுக்கு முன் நடிகை ரஞ்சிதாவுடன் தனிமையில் இருந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, சமீபத்தில் தன்னுடைய ஆசிரமத்தில் இருக்கும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக கூறி கைது செய்து பின் ஜாமினில் வெளி வந்தார்.

அதன்பின் தனி நாடு ஒன்றினை உருவாக்கி அங்கு செட்டிலாகிய நித்யானந்தா ஆன்மீக வீடியோ இணையத்தில் வெளியாகியும் வருகிறது. கைலாச நாட்டிலும் கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாத நித்தி, வெளிநாட்டு பெண் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.

நித்யானந்தாவும் அவரது சீடர்களும் தனக்கும் அங்குள்ள பெண்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக பெங்களூரில் உள்ள பிடதி போலிசாருக்கு இ மெயில் மூலம் புகார் கொடுத்துள்ளார் அந்த வெளிநாட்டு பெண்.

இதற்கு போலிசார் இந்த இ மெயில் புகார்கள் ஏற்ற்கொள்ள முடியாது என்பதால் கைலாசத்தில் இருந்து இந்தியா வந்து இங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகாரளியுங்கள் என்று கூறியுள்ளனர் பிடதி போலிசார்.