நாளா பக்கமும் ஏமாற்றத்தை சந்திக்கும் ரஜினிகாந்த்!! கோடியை ஆட்டையை போட்ட கும்பலாம் அப்செட்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பம் முதல் தன்னுடைய பெயரில் பவுண்டேசன் ஒன்றினை நடத்தி வருகிறார். ரஜினிகாந்த் பவுண்டேசன் என்ற பெயரில் நடந்து வரும் அறகட்டளை நிறுவனம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறது.
அறக்கட்டளையின் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் நேற்று போலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றினை அளித்திருக்கிறார்.
அதில், ரஜினிகாந்த் பவுண்டேசன் என்ற பெயரையும் ரஜினிகாந்த் பெயரையும் பயன்படுத்தி முகநூலில் ஒரு கணக்கினை போலியாக துவங்கப்பட்டு பொது மக்களிடம் பணம் வசூலித்து சுமார் 2 கோடி அளவில் மோசடி செய்துள்ளனர் ஒரு கும்பல்.
ரஜினிகாந்தின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வண்ணம் இந்த விசயம் இருப்பதாகவும், மக்களிடம் பணம் வசூலித்து குலுக்கல் முறையில் 200 பேரை தேர்வு செய்து தேவையான பரிசினை வழங்குவதாகவும் கூறி ஏமாற்றியிருக்கிறார்கள்.
2 கொடி வரை அந்த கும்பல் பணத்தை பறித்துள்ளதாக கூறி புகாரளித்துள்ளனர். சமீபகாலமாக ரஜினிகாந்த் மகள்கள் வீட்டில் நகைகள் கொல்லை போனதை தொடர்ந்து ரஜினிகாந்த் பவுண்டேசனில் இப்படியொரு மோசடியை மர்ம நபர்கள் செய்திருப்பது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
