மகனுக்காக இத கூட பண்ணல! தனித்தே விடப்பட்ட ஜேசன் விஜய்..உண்மையை உடைக்கும் பிரபலம்

Vijay Tamil Cinema Actors jason sanjay
By Dhiviyarajan Aug 30, 2023 06:00 PM GMT
Report

தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷன்கள் விஷயம் ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது. அது என்னவென்றால் நடிகர் விஜய்யின் மகன் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானது தான்.

சமீபத்தில் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு வந்த ஜேசன் சஞ்சய், தற்போது லைக்கா தயாரிப்பு நிறுவனம் மூலம் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தனஞ்செயன், ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்க மாட்டார். அப்படி நடித்தாலும் கதைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி விஜய் எப்போது, தனது மகன் தன்னால் சினிமாவில் வளர வேண்டும் என்று நினைக்கமாட்டார். அதனால் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாவதை கூட தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கவில்லை என்று தனஞ்செயன் கூறியுள்ளார்.