கடை திறப்பு விழாவுக்கு சென்ற பிரபல நடிகை!! ஹோட்டல் அறைக்குள் புகுந்த 4 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..

Gossip Today Indian Actress Hyderabad
By Edward Mar 27, 2025 05:30 AM GMT
Report

பாலிவுட் நடிகை

ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த பாலிவுட் நடிகை ஒருவரை அனுமதி இன்றொ அவர் அறைக்குள் சென்று நடிகையை தாக்கப்பட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் அவர் வைத்திருந்த நடிகைகளை 4 பேர் கொண்ட மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபலமான நடிகையாக இருக்கும் சிலரை கடைத்திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம். இதன்மூலம் அந்த கடைக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக நடிகைகளை வரவழைப்பார்கள்.

கடை திறப்பு விழாவுக்கு சென்ற பிரபல நடிகை!! ஹோட்டல் அறைக்குள் புகுந்த 4 பேர்.. அதிர்ச்சி சம்பவம்.. | Gang Assaults Actress Robs Her Of Cash Hotel Room

அந்தவகையில் கடை திறப்பு விழாவில் கலந்துக்கொள்ள பாலிவுட் நடிகை ஒருவர் ஹைதராபாத்திற்கு வந்துள்ளார். பஞ்சாரா ஹில்ஸ் அருகேயுள்ள வசாப் டேங்கில் இருக்கும் ஹோட்டலில் அந்த நடிகை தங்கியிருந்த போது அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக அவரின் பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

போலிசில் புகார்

இதுகுறித்து அந்த நடிகை போலிசில் புகாரளித்திருக்கிறார். அந்த புகாரில் நடிகை, நான் தூங்கிக்கொண்டிருந்த போது ஹோட்டல் அறைக்குள் 2 பெண்கள் மற்றும் 2 இளைஞர்கள் வந்தனர். என்னை தாக்கி தகாத முறையில் நடந்து கொண்டனர்.

கடை திறப்பு விழாவுக்கு சென்ற பிரபல நடிகை!! ஹோட்டல் அறைக்குள் புகுந்த 4 பேர்.. அதிர்ச்சி சம்பவம்.. | Gang Assaults Actress Robs Her Of Cash Hotel Room

நான் தப்பிக்க முயன்றபோது அவர்கள் என்னை பெட்டில் அமுக்கி என் 2 கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு அங்கிருந்த என் பொருட்களை திருடிச்சென்றனர் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலிசார் சிசிடிவி கேமாராவை ஆய்வு செய்து 4 பேர் யார் என்பது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.