மீம் ஆக மாறிய தனுஷின் 'போயஸ் கார்டன்ல வீடு' பேச்சு.. ரிப்ளை கொடுத்த தனுஷ்

Dhanush
By Karthick Raja Apr 20, 2026 03:00 AM GMT
Report

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலமான நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக கர திரைப்படம் வெளிவரவுள்ளது.

நடிகர் தனுஷ் இதற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது "ஏன் நானெல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா" என கூறினார். அது அப்போது மீம் ஆக மாறி அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது.

மீம் ஆக மாறிய தனுஷின்

இந்நிலையில் இன்று நடந்த கர படத்தின் விழாவில் பேசும்போது தனுஷிடம் அந்த மீம்கள் பற்றி தொகுப்பாளர் RJ விஜய் கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் சொன்ன தனுஷ் "அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது நம் கையில் தான் உள்ளது. நான் ஏர்போர்ட் செல்லும்போதும் பஸ் டிரைவர் என்னிடம் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டார். போட்டோ எடுத்தபின் ஒரு விஷயம் சொன்னார். தம்பி நான் யாரிடமும் செல்பி கேட்டதில்லை. உங்களிடம் தான் முதல் முறை எடுத்துக்கொள்கிறேன். அதற்கு காரணம், நீங்க போயஸ் கார்டன் வீட்டை பற்றி பேசியது என் மகனுக்கு motivation ஆக இருக்கிறது. அவன் inspire ஆகி பயங்கரமாக வேலை செய்கிறான் என கூறினார்".

மீம் ஆக மாறிய தனுஷின்

"அதனால் inspiration ஆக எடுத்துக்கொள்ளலாம். அல்லது மீம் மெட்டிரியல் ஆக மாறினாலும்.. அது entertainment தான். entertainment செய்வது தானே நம் வேலை. அதுவும் ஓகே தான். ஏன் நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதானு சொல்ல கூடாதா?" என தனுஷ் மீண்டும் அதே பாணியில் பேசி அரங்கத்தை அதிர வைத்தார்.