அவமானப்படுத்திய இளையராஜா!! சாப்பாட்டுக்கு வழியில்லாம இங்க வரலன்னு சொல்லி கிளம்பிய கங்கை அமரன்
கங்கை அமரன்
இசைஞானி இளையாராஜாவின் சகோதரரும் இயக்குநர், இசையமைப்பாளருமான கங்கை அமரன் திறமை வாய்ந்த ஒருவர். ராஜாவின் இசைக்கு பாடல்கள் எழுதியவர், கரகாட்டக்காரன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அப்படம் இன்றுவரை பலரது ஃபேவரேட் படமாக இருந்து வருகிறது.

அமரனின் இயக்கம், கவுண்டமணி - செந்திலின் காமெடி, இசைஞானியின் இசை என அத்தனையும் சேர்ந்து ஒரு படத்திற்கு மைலேஜை கூட்டியது. இளையராஜாவுடனான பிரச்சனையால் பாக்யராஜ் இசையமைக்க வந்தார். ஆனாலும் தான் இசையமைப்பாளராவதற்கு முன் ராஜாவுக்கு பதில் தன் படங்களில் கங்கை அமரனி பயன்படுத்திருக்கிறார்.
அந்தக்கூட்டணியும் சக்சஸ்ஃபுல் கூட்டணியாக அமைந்தது. இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கங்கை அமரன், சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவுடனான பிரச்சனையால் ஒதுங்கி இருந்து பின் சேர்ந்தார்.
சமீபத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ராம்குமார் எடுத்த பேட்டியொன்றில் பங்கேற்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சாப்பாட்டுக்கு வழியில்லாமல்
அதில், ஒருநாள் நான் இளையராஜா, பாஸ்கர் மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ராஜா அண்ணன், இனிமேல் என்னுடன் அமர்ந்து நீங்கள் சாப்பிடவேண்டாம், நீங்கள் தனியாக சாப்பிடுங்கள் என்று கூறினார்.
உடனே நான், இதோ பாருங்கள் அண்ணா, நாங்கள் ஒன்றும் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இங்கே வரவில்லை. அண்ணன் தம்பிகளாகிய நாம் சாப்பிடும் மூன்று வேளைதான் சந்திக்கிறோம், அதனால் தான் வந்தேன், இனிமேல் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.
பின் அதை மனதில் வைத்துதான், ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நானென்ன பாடலை எழுதினேன். நேராக ராஜாவிடம் சென்று, இதுதான் எனக்கு வந்த பாடல் என்று கூறி கொடுத்துவிட்டு வந்துவிட்டேன் என்று கூறினார்.