உனக்கு எதுக்கு 1 லட்சம்!! ஆடியோ லான்சிற்கு வராத நடிகையை மோசமாக திட்டிய தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா, விக்ரம் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் பிதாமகன். இப்படத்தில் கஞ்சா குடுக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்து காமெடி நடிகராக அறிமுகமாகியவர் கஞ்சா கருப்பு.
தயாரிப்பில் நஷ்டம்
கருப்பு ராஜா என்ற பெயரை எடுத்து விட்டு கஞ்சா கருப்பு என்று பெயர் வர இப்படமும் ஒரு காரணமாக அமைந்தது. இப்படத்தினை அடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கஞ்சா கருப்பு 50க்கும் மேற்பட்ட படங்களில் ரசிக்க வைத்தவர். அப்படி நடிப்பை தாண்டி 2014 ஆம் ஆண்டு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தினை தயாரித்தும் நடித்தும் இருந்தார். இப்படத்தினை தயாரித்த கஞ்சா கருப்பு படம் வெளியாகாமல் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு நடுத்தெருவிற்கு வந்துவிட்டேன் என்று கூறி புலம்பியிருக்கிறார்.

1 லட்சம் பணம் கேட்ட நடிகை
இந்நிலையில் சமீபத்தில் ஓங்காரம் என்ற படத்தில் நடித்துள்ள கஞ்சா கருப்பு அப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அப்படத்தில் நடித்த நடிகை வர்ஷா விஸ்வநாத், ஆடியோ லான்ச்சிற்கு வந்தால் 1 லட்சம் பணம் வேண்டும் என்றாராம். அந்த ஹீரோயின் 1 லட்சம் கேக்குறது நியாயமில்லை என்று கூறி, கெட்ட வார்த்தை ஒன்றினை பயன்படுத்தி வந்திருந்தா, பத்திரிக்கையாளர்கள் நிறையபேர் பார்த்து விளம்பரம் செய்வார்கள். ஏன் தான் இந்த தர்த்திரம் பிடித்த ***-கள் இப்படி நடந்துக்குறாங்கன்னு தெரியல என்று கூறியுள்ளார் கஞ்சா கருப்பு.
இதுகுறித்து தயாரிப்பாளர் கே ராஜன் உனக்கு எதுக்கு 1 லட்சம். சம்பளம் வாங்கிட்டா, இங்க வந்து பிரமோஷனில் கலந்து கொண்டால் என்ன என்று கேட்டுள்ளார். மேலும் அந்த நடிகையின் புகைப்படத்தை கொடுங்கள், முதல் படத்திலேயே இப்படி நடந்துகிட்ட அந்த நடிகை இனிமே தமிழில் யாரும் புக் பண்ண விடமாட்டேன் என்று கோபத்தில் திட்டியுள்ளார். உன்னை தனியா எங்கயாவது கூப்பிட்டாங்களா? என்றும் சரமாறியாக பேசியுள்ளார் கே ராஜன்.