இருந்துட்டுபோட்டும் உன் ரேட் என்னணு கேட்டாரு!! எதிர்நீச்சல் நடிகை ஓபன் டாக்...
காயத்ரி கிருஷ்ணன்
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் முதல் சீசனில் ஜான்சி ராணி ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி கிருஷ்ணன். தற்போது அயலி வெப் தொடரில் நடித்து வருகிறார் காயத்ரி. சமீபத்தில் தனக்கு கல்லூரி காலக்கட்டத்தில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது போதையில் ஒரு நபர் என்னிடம் நேரடியாகவே வந்து ரேட் பேசினார். நான் உடனே ஹலோ நான் லயோலா கல்லூரியில் படிக்கிறேன் என்று சொன்னதும், இருந்துட்டு போ, உன் ரேட் என்னணு சொல்லு என்று கேட்டார்.
நான் பலமுறை கல்லூரி மாணவி என்று சொல்லியும் அதை புரிந்துக்கொள்ளும் நிலையில் அவர் இல்லை. அவர் ஓவராக குடித்து இருந்தார், என்னுடன் இருந்த அனைவருமே, ப்ரோக்ராமிற்கு சென்றுவிட்டதால், நான் தனியாகத்தான் இருந்தேன்.
ஒரு கட்டத்திற்கு மேல் நான் மாடியில் இருந்து குதித்துவிடலாம் என்று நினைத்தப்போதுதான், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்து என்னை காப்பாற்றினார். என் வாழ்க்கையில் அந்த மோசமான சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது என்று நடிகை காய்த்ரி பகிர்ந்துள்ளார்.