வாய்ப்பில்லாமல் பாம்பே போனதும் அசிங்கப்படுத்திய பெண்!! பிரபல நடிகர் நடிகை காயத்ரி கொடுத்த ஷாக்..
தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர். இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். எப்போதும் அடக்கவுடக்கமான கிராமத்து நடிகையை போல் இருந்த காயத்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 10 வருடமாக மொட்டை அடிக்க ஆசைப்பட்டு இருக்கிறேன். அதை செய்யமுடியவில்லை. படத்தில் அடுத்தடுத்து நடிப்பதால் அதை செய்யமுடியவில்லை. எனக்கு மொட்டை அடிப்பது கவலையாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கிளாமர் ரோலில் நடிக்க என்னுடைய தேர்வில்லை. எனக்கு அதுதான் வருகிறது. கிளாமர் ரோலில் நடிக்க எனக்கு ஆசை தான். அதற்காக நான் ஃபிட் ஆகிட்டுதான் அதில் நடிப்பேன்.
தமிழில் வாய்ப்பில்லாமல் 2014ல் பாம்பே வாய்ப்பு கேட்டு சென்றேன். அப்போது டேலண்ட் மேனேஜ்மெண்ட் ஏஜென்சியில், அங்கு இருந்த ஒரு பெண், அங்கே இருந்துரு, இங்க வெள்ளையா இருந்தா தான். டஸ்கி கலரில் இருப்பவங்களுக்கு அதெல்லாம் கிடைக்காதுன்னு மூஞ்சில அடுத்தது போல் சொன்னார்கள். அப்போது இயக்குனர் அனுராக் காஷ்யப்-க்கு வாய்ப்புக்காக மெயில் செய்தேன். ஷோ ரீல் அனுப்ப சொல்லி என்னை கேட்டார், நானும் அனுப்பினேன்.
அதன்பின் சூப்பர் டீலக்ஸ் பார்த்திருந்தார். அதன்பின் நானும் இன்னொரு முறை மெயில் செய்த போது, என்னை பாராட்டி ரீப்ளே செய்தார். அதேபோல் நடிகர் ரன்வீர் சிங் நேரில் பார்த்து, எதிர்ப்பார்க்காத அளவிற்கு என்னை பாராட்டியதாகவும் கூறியிருக்கிறார். 10 வருடமாக நடித்திருக்கிறேன், என் நடிப்பை பார்த்து பாராட்டுவாங்கன்னு. ரன்வீர் சிங் பார்த்து பாராட்டியதுதான் எனக்கு சிறப்பானது என்று தெரிவித்துள்ளார்.