GBU : ஏகே-ன்னு கத்துறதுதான் ஃபேன் பாய் சம்பவமா!! ஆதிக்கை பங்கமாக கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்..
குட் பேட் அக்லி
நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தின் அப்டேட்களை இயக்குநர் ஆதிக், சமீபநாட்களாக வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாட்டினை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் நேற்று வெளியானது.
ஃபர்ஸ்ட் சிங்கிள்
கேங்ஸ்டர் என்ற வார்த்தை தமிழ் சினிமாவில் மலையேறி விட்ட நிலையில், நடிகர்கள் பலர் ஒரிஜினல் கேங்க்ஸ்டர் என்பதை ஓஜியாக தங்களை மாற்றிக்கொள்வது போன்ற படங்களில் நடித்து வருகிறார்கள்.
அப்படிதான் குட் பேட் அக்லி படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ள அஜித் குமாரையும் ஓஜி என்று வைத்துள்ளனர்.
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ஓஜி பாடலை வைத்து விஜய் ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள். அதிலும் ஆதிக் ரவிச்சந்திரன் கத்துவதை, 7ஜி ரெய்ன்போ காலனி படத்தில் வரும் ராஜா ராஜாதி ராஜா பாடலை வைத்து பங்கமாக கலாய்த்துள்ளனர்.
Fan boy Sambavam na Kathurathu nu nenachukittu irukaan pola @Adhikravi 😂pic.twitter.com/xeNDvvxdgC
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) March 18, 2025
😑🫤🫤 pic.twitter.com/Fju6x7BnrS
— Siva Somu MC (@Siva_somu_mc_96) March 18, 2025