மனைவி முன்பே பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை! முகத்தால் பளார் விட்ட நடிகை ஜெனிலியாவின் வீடியோ!

actress video wife kiss Genelia
By Jon Mar 23, 2021 02:51 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் பாலிவுட் நடிகைகள் அறிமுகமாகி பிரபலமான பின் இந்தி படங்களில் கொடிக்கட்டி பறந்து வருவார்கள். அந்தவகையில் நடிகர் விஜய்யின் சச்சின், ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் நடித்து அறிமுகமாகி பாலிவுட் பக்கம் சென்றவர் தான் நடிகை ஜெனிலியா.

இந்தி, தெலுங்கு, தமிழ் என முன்னணி நடிகையாக களம் கண்ட ஜெனிலியா தற்போது படங்கள் எதுவும் நடிக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருந்து வருகிறார். மார்க்கெட் இல்லை என்பதை உணர்ந்த ஜெனிலியா பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமீபத்தில் கூட தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் உள்ள வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு தன்னுடைய கணவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஸ்கேட்டிங் பயிற்சியின்போது கையை உடைத்துக் கொண்டாலும் விஜய்க்காக இந்த வீடியோவை சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லி விட்டு போட்ட ஆட்டம் தான் இன்றுவரை இணையதளத்தில் ட்ரண்டிங் வீடியோவாக சென்று கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெனிலியா வெளியிட்ட அந்த வீடியோ கிட்டத்தட்ட 9 லட்சம் லைக்குகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெனிலியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கணவர் இன்னொரு நடிகைக்கு முத்தம் கொடுக்கும்போது கடுப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதைப் பார்த்துவிட்டு கணவரை வீட்டிற்குள் போட்டு பொரட்டி பொரட்டி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளது. நகைச்சுவையாக இருக்கும் இந்த வீடியோ தான் இன்றைய இணையதள ட்ரென்டிங்.