வாய்ப்பு கொடுக்காமல் அங்கேயே போன்-னு துரத்தினாங்க!! பல ஆண்டு உண்மை கூறிய நடிகை ஜெனிலியா..
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி முகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பாய்ஸ். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிலியா டிசோசா.
இப்படத்தினை தொடர்ந்து தமிழில், சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் ரெஸ்முகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கதாநாயகியாக நடிப்பதை நிருத்திவிட்டு கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து ஜெனிலியா முக்கிய ரோலில் நடித்த Trial Period ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. அப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிக்காக பேட்டி கொடுத்திருந்தார்.
அங்கு நான் தென்னிந்திய சினிமாவில் நடித்த போது என்னை பாலிவுட் சினிமாவில் கைவிட்டுவிட்டனர் என்றும் அங்கேயே செல் என்றும் கூறினார்கள். ஆனால் எனக்கு நடிப்பின் மீது காதல் வர காரணம் தென்னிந்திய சினிமா தான்.
எனக்கு தென்னிந்திய சினிமாவை ரொம்ப பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ஜெனிலியா. கடைசியாக ஜெனிலியா 13 வருடத்திற்கு முன் வேலாயுதம் படத்தில் நடித்திருந்தார்.