அந்த விசயத்தில் இவங்க மிஞ்சிட்டாங்களே!! சத்தமே இல்லாமல் நயன் தாராவுக்கு ஆப்பு வைத்த தனுஷ் பட நடிகை!!

Aishwarya Rajesh Nayanthara Indian Actress
By Edward Apr 01, 2023 04:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தற்போது பாலிவுட்டில் ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்குமுன் திருமணம் செய்து இரட்டை குழந்தைகளை பெற்றதில் இருந்து பல பிரச்சனைகளையும் வதந்திகளை சந்தித்து வருகிறார்.

அந்த விசயத்தில் இவங்க மிஞ்சிட்டாங்களே!! சத்தமே இல்லாமல் நயன் தாராவுக்கு ஆப்பு வைத்த தனுஷ் பட நடிகை!! | Getting Many Movie Opportunities After Nayanthara

இதனால் அவரின் கேரியர் கொஞ்சம் அடிவாங்கி பல வாய்ப்புகளை இழந்து வருகிறார் நயன் தரா. அப்படி நயன் தாராவை புக் செய்த படங்களின் தயாரிப்பாளர்கள் வேறொரு நடிகையின் பக்கம் திசை திரும்பி வருகிறதாம்.

நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் எப்படி நயன் தேர்வு செய்கிறாரோ, அதே ஃபார்முலாவை தான் அந்த நடிகையும் கடைப்பிடிக்கிறாராம். காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமாகி வடசென்னை, கனா உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த விசயத்தில் இவங்க மிஞ்சிட்டாங்களே!! சத்தமே இல்லாமல் நயன் தாராவுக்கு ஆப்பு வைத்த தனுஷ் பட நடிகை!! | Getting Many Movie Opportunities After Nayanthara

தற்போது கதாநாயகிக்கு கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நயன் தாராவிற்கு இணையாக இல்லாவிட்டிலும் சம்பளம் குறைவாக கேட்பார் என்று பல தயாரிப்பாளர்கள் நயன் தாரா நோ சொன்னதும் ஐஸ்வர்யா பக்கம் செல்கிறார்களாம்.

பல படங்களில் அதுவும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படியே போனால் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இடத்தையும் பிடித்துவிடுவார் என்றும் அவரை பின்னுக்கு தள்ளிவிடுவார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.