கர்ப்பமாக்கி ஏமாற்றிய லோகேஷின் வலது கை.. பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார்
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் வரிசையில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து இவர், தளபதி விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜிடம் துணை இயக்குனராகவும் அவரது திரைப்படங்களுக்கு பாடலாசிரியராகவும் எழுதி வருபவர் தான் விஷ்ணு இடவன்.
இவரை குறித்து லோகேஷ் கனகராஜ் பெருமையாக பேட்டி ஒன்றில் பேசியிருப்பார். விஷ்ணு இடவன் எழுதிய 'பொளக்கட்டும் பற பற' மற்றும் 'போர் கண்ட சிங்கம்' போன்ற பாடல்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

போலீசில் புகார்
சமீபத்தில் விஷ்ணு இடவன் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், விஷ்ணு இடவன் காதலித்து வந்த பெண்ணை கர்ப்பமாகிவிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
