கோட் கிளைமேக்ஸ் அப்பட்டமான காப்பி, அடுத்த அட்லீயான வெங்கட் பிரபு, ஆதாரத்துடன் இதோ
தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்து செம்ம ஓட்டம் ஓடி வரும் படம் கோட். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் தமிழகத்தில் அனைத்து திரையரங்கிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் ஓடி வருகிறது.
இந்நிலையில் கோட் திரைப்படத்தில் கிளைமேக்ஸ் 40 நிமிடக் மிக சுவாரஸ்யமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.
இதில் முக்கியமான ஒரு பைக் சேஸிங் ஒன்று ஹாலிவுட்டில் வெளியான பைனல் ஸ்கோர் என்ற படத்திலிருந்து அப்படியே வெங்கட் பிரபு காப்பியடித்துள்ளார்.
அதில் புட்பல் மேட்ச், இதில் கிரிக்கெட் மேட்ச் அவ்வளவு தான் வித்தியாசம், இதை வைத்து இப்படி அடுத்த அட்லீ ஆகிவிட்டீர்களே வெங்கட் பிரபு என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அதானே.. என்னடா கிளைமேக்ஸ்ல ஏதேதோ வித்தைலா காட்டிருக்கானேனு பாத்தா இங்கருந்து உருவிருக்கான்... பலே வெள்ளையத்தேவா.. பலே.. @vp_offl ? pic.twitter.com/Ju9zUUv1Ht
— ♔.. ஆஃப்கான் ..♔ (@iam_AKfan) September 8, 2024