ரஜினியின் சாதனையை முறியடிக்க தவறிய விஜய்.. GOAT படத்திற்கு இப்படியொரு நிலைமையா

Rajinikanth Vijay Jailer Greatest of All Time
By Kathick Sep 09, 2024 04:30 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. GOAT திரைப்படம் வெளிவந்து முதல் வாரத்தை கடந்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வசூலில் நல்ல வரவேற்பு GOAT படத்திற்கு கிடைத்துள்ளது என சொல்லப்படுகிறது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை புக் மை ஷோ வலைத்தளத்தில் GOAT திரைப்படத்திற்கு 282.2K டிக்கெட்ஸ் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் சாதனையை முறியடிக்க தவறிய விஜய்.. GOAT படத்திற்கு இப்படியொரு நிலைமையா | Goat Movie Failed To Beat Jailer Record

இதற்கு முன் வெளிவந்த லியோ படத்தின் முதல் வார இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமையில் புக் மை ஷோவில் 547.7K டிக்கெட்ஸ் புக் செய்யப்பட்டிருந்ததாம். தளபதி விஜய்யின் இந்த இரண்டு திரைப்படங்களுமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் சாதனையை முறியடிக்கவில்லை.

ஏனென்றால் ஜெயிலர் திரைப்படத்தின் வெளிவந்த முதல் வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையில் சுமார் 681.2K டிக்கெட்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த சாதனையை அதன்பின் வெளிவந்த லியோ படமும், GOAT படமும் முறியடிக்க வில்லை என தகவல் தெரிவிக்கின்றனர்.