முக்கிய இடத்தில் மோசமாக அடிவாங்கிய விஜய்யின் கோட்.. அப்போ பல கோடி நஷ்டமா
Vijay
Greatest of All Time
Box office
By Karthick Raja
தளபதி விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. உலகளவில் இதுவரை ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தாலும், குறிப்பிட்ட சில முக்கிய இடங்களில் கோட் வசூலில் அடிவாங்கியுள்ளது என சொல்லப்படுகிறது.

குறிப்பாக கேரளாவில் கோட் திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூல் ஈட்டிய நிலையில், இரண்டாவது நாளில் படுமோசமாக அடிவாங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பல கோடி நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். தளபதி விஜய்யின் படத்திற்கே இப்படியொரு நிலைமையா என பலரும் கூறி வருகிறார்கள்.