பிக் பாஸில் லக்ஷ்மி ப்ரியாவின் முகத்திரையை கிழித்த ஜாவீத்
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம். அதனாலேயே இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் உள்ள 7,8 மொழிகளில் நடத்தி வருகின்றனர்.
அதிலும் அந்தந்த துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்ட மகாநதி புகழ் லக்ஷ்மி ப்ரியா செல்ல, இவர் தான் டைட்டில் அடிப்பார் என்ற அளவிற்கு முதல் நாளே பெரிய ஆதரவு இருக்க, தற்போது இவர் பெயர் நாளுக்கு நாள் டேமேஜ் ஆகி வருகிறது.
அதிலும் நேற்று எலிமினேட் ஆன ஜாவீத், லக்ஷ்மி ப்ரியா எப்போதும் ஒரே மாதிரி இருங்கள், ஒருத்தரிடம் ஒரு முகம், மற்றொரிடம் வேறு ஒரு முகம் என இருக்காதீர்கள் என கடுமையாக பேசினார், இது எல்லோருக்கும் குறிப்பாக லக்ஷ்மி ப்ரியா ரசிகர்களுக்கும் கூட சரி என்று தான் தோன்றி இருக்கும் என கூறப்படுகிறது.