சினேகன் - கன்னிகா அப்பா அம்மா ஆகப்போறாங்க.. மகிழ்ச்சியான அறிவிப்பு

Pregnancy Snehan
By Kathick Oct 01, 2024 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பாடலாசிரியர் ஆவார் சினேகன். இவர் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.

இதுமட்டுமின்றி உலகநாயகன் கமல் ஹாசனின் கட்சியிலும் முக்கிய நபராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகன் - கன்னிகா அப்பா அம்மா ஆகப்போறாங்க.. மகிழ்ச்சியான அறிவிப்பு | Kannika Snekan Is Pregnant

சினேகன் பிரபல நடிகை கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்ததே கமல் ஹாசன் தான்.

இந்த நிலையில், கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியாக செய்தியை சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்களுக்கும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த பதிவு..