சென்னையில் GOAT படத்தை வைத்து பிரபல திரையரங்கங்கள் பகல் கொள்ளை

Vijay Greatest of All Time
By Tony Aug 30, 2024 03:30 AM GMT
Report

விஜய்யின் கோட்

தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் அடுத்த வாரம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை மங்காத்தா, மாநாடு புகழ் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முன் பதிவு உலகம் முழுவதும் பல இடங்களில் தொடங்கிவிட்டது. அதிலும் ஓவர்சீஸில் இப்படத்தின் முன் பதிவு தொடங்கி ரூ 10 கோடி வரை அட்வான்ஸ் புக்கிங் நடந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் பிரபலமான திரையரங்கு ஒன்று தங்களை ரசிகர்களின் கோட்டை என்று சொல்லும் திரையரங்கள் கோட் படத்தின் டிக்கெட் உடன் கண்டிப்பாக ஸ்னாக்ஸ் வாங்க வேண்டும் என்று டிக்கெட் விலையை ரூ 300-க்கு மேல் விற்று வருகிறது.

இது ரசிகர்களிடம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஸ்னாக்ஸ் என்பது மக்கள் விருப்பப்பட்டு வாங்கும் ஒன்று, அதை தினிக்க கூடாது என்று கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.