60 ஆயிரம் அப்பு!! உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.. காரணமே அந்த ஒரு மனுஷன் தான்..
தங்கத்தின் விலை
கடந்த இரு மாதங்களாக தங்கம் விலை சரிய ஆரம்பித்து மக்களுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது. இதற்கு காரணம் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது தான்.
இதன்பின் தங்கம் விலை பெரியளவில் சரிந்து அரசு பத்திரம் மற்றும் டாலர் மதிப்பும் உயர்ந்தது. ஆனால் இரு மாதங்களுக்கு பின் டிரம்ப் அதிபராக பதிவியேற்றப்பின் பல விதிகளில் கையெழுத்திட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த பின்னணியில் தங்கம் விலை தற்போது அதிகரித்து முதலீட்டு சந்தைகளில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடா - மெக்சிகோ நாடுகள் மீது 25 சதவீத வரி விதிப்பதாகவும், சீனா, இந்தியா போன்ற நாடுகள் இருக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்றும் டிரம்ப் கூறியது முதல் தான் முதலீட்டுச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாயன்று 1 சதவீதத்துக்கும் அதிகமாக தங்கம் விலை இரண்டு மாத உயர்வாக 2745 டாலரை எட்டியது.
ரூ. 60,200
நேற்று இரௌ அமெரிக்க சந்தை வர்த்தகத்தில் 2750 டாலர் வரை உயர்ந்ததின் எதிரொலியாக எம் சி எக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.24 சதவீதம் உயர்ந்து 79,413 ரூபாயாக உள்ளது.
தற்போது சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தங்கத்தின் விலை 60,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்ததால் தங்கம் வாங்குவோருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.