60 சவரன் நகை காணாமல் போனதாக கூறி நாடகம்!! சிக்கிய பாடகர் விஜய் ஏசுதாஸ் மனைவி தர்ஷனா..

Gold Tamil Singers
By Edward Jun 13, 2023 10:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக திகழ்ந்து வரும் விஜய் ஏசுதாஸின் மனைவி தர்ஷனாவுன், சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி வீட்டில் இருந்த நகைகளை சரிப்பார்க்கும் போது 60 சவரன் தங்க மற்றும் வைர நகைகளை காணவில்லை என்று கூறி அபிராமபுரம் காவல் நிலையத்தில் மார்ச் 30 ஆம் தேதி புகாரளித்துள்ளார் தர்ஷனா.

விசாரணையில் இறங்கிய போலியார், நகைகளை திருமணத்தில் தர்ஷனாவின் குடும்பத்தினர் அளித்தவை என்று கண்டறிந்துள்ளனர்.

60 சவரன் நகை காணாமல் போனதாக கூறி நாடகம்!! சிக்கிய பாடகர் விஜய் ஏசுதாஸ் மனைவி தர்ஷனா.. | Gold Theft Police Plan To Quiz Vijay Yesudass Wife

மேலும் லாக்கரை ரகசிய குறியீடு மற்றும் ரகசிய எண்கள் தெரிந்தால் மட்டுமே திறக்க முடியும். அப்படி கணவர் - மனைவிக்கு மட்டுமே அந்த ரகசிய எண் தெரியும் என்பதும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து துபாயில் இருக்கும் விஜய் ஏசுதாஸிற்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதுகுறித்து அவரை பலமுறை தொடர்பு கொண்டு சரியான பதிலளிக்காமல் இருந்தும் சென்னைக்கு வரமாலும் இருந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர்களின் வீட்டில் வேலைப்பார்க்கும் 11 வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தியதில் நாரும் நகைகளை திருடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. புகாரளித்த விஜய் ஏசுதாஸின் மனைவியின் மீது சந்தேகம் எழுந்த போலிசார் தர்ஷனாவை விசாரித்து வருகிறார்கள்.

பிப்ரவரி மாதம் காணாமல் போன நகையை தெரியவந்ததும் புகாரளிக்காமல் மார்ச் 30 ஆம் தேதி புகாரளிக்க என்ன காரணம் என்றும் கணவர் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் நாடகமாடுகிறார் என்ற சந்தேகமும் எழுந்ததால் அவரை விசாரணை செய்து வருகிறார்கள் போலிசார்.

ஏற்கனவே விஜய் ஏசுதாஸ் மற்றும் அவரது மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ள செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.