குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு!! பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்..

Ajith Kumar Trisha Bayilvan Ranganathan Adhik Ravichandran Good Bad Ugly
By Edward Apr 10, 2025 07:30 AM GMT
Report

குட் பேட் அக்லி

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பல நடித்து இன்று ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகியுள்ளது குட் பேட் அக்லி படம். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலீஸாகியுள்ள இப்படத்தை பார்த்தவர்கள் பலரும் நல்ல விமர்சனங்களை கூறி வருகிறார். தற்போது குட் பேட் அக்லி படத்தை பார்த்த பயில்வான் ரங்கநாதன் படம் எப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு!! பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்.. | Good Bad Ugly Review By Bayilvan Ranganathan

பயில்வான் ரங்கநாதன்

அதில், குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் ஒவ்வொரு மொழிக்கு என ஏகப்பட்ட வில்லன்கள் நடித்திருக்கிறார்கள். அஜித் நடித்த படங்களிலேயே அதிக வில்லன்கள் நடித்த படமாக இப்படம் அமைந்திருக்கிறது.

ரெடின் கிங்ஸ்லி மற்றும் யோகி பாபு காமெடி ரசிக்கும் படியாக இருக்கிறது. புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவிஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. 200 ரூபாய் டிக்கெட்டில் நீங்கள் படம் பார்க்கிறீர்கள் என்றால் இப்படம் நிச்சயமாக 500 ரூபாய்க்கான மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு!! பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்.. | Good Bad Ugly Review By Bayilvan Ranganathan

படத்தின் கதை

மிகவும் மோசமாக இருக்கும் அஜித்குமார், எதுவுமே வேண்டாம் என்று அனைத்தையும் விட்டுவிட்டு திருந்தி வாழ நினைக்கிறார். ஆனால் தன் மகனுக்காக மீண்டும் வில்லனாக மாறி, மறுபடியும் பழைய வேஷத்தை போடுகிறார்.

இதுதான் படத்தின் கதை. பழி வாங்கும் கதை என்று மட்டும் வைத்து விடாதீர்கள், அப்பா மகன் செண்டிமெண்ட், மனைவி கணவன் செண்டிமெண்ட் என கலவையாக இருக்கிறது. திரிஷா - அஜித் காட்சிகள் பெரியளவில் இல்லை. பெரியளவில் அஜித் படங்கள் சண்டைக்காட்சிகள் இருக்காது, ஆனால் இப்படத்தில் அட்டகாசமான சண்டைக்காட்சிகளில் அஜித் நடித்துள்ளார்.

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு!! பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்.. | Good Bad Ugly Review By Bayilvan Ranganathan

அதுமட்டும் இல்லாமல் நடிகை சிம்ரன் வித்தியசமான ரோலில் நடித்திருக்கிறார். இப்படியும் சிம்ரன் நடிப்பார்களா? என படம் பார்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. லேக் இல்லாமல் படம் மிகவும் சுவாரஷ்யமாக செல்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநராக இல்லாமல், அஜித்தின் ரசிகராக இருந்து இப்படத்தை எடுத்துள்ளார்.

நிச்சயம் இப்படம் அஜித்தின் பெயர் சொல்லும் படமாக அமைந்து வசூலை அள்ளும் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.