போனி ஆகாத ரெட்ரோ, குட் பேட் அக்லி!! தலையில் துண்டைப்போட்ட தயாரிப்பாளர்கள்..

Ajith Kumar Suriya Gossip Today Good Bad Ugly Retro
By Jai Jun 26, 2025 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக திகழ்ந்து வரும் அஜித் மற்றும் சூர்யா ஒரு படம் தோல்வியை கொடுத்தாலும் அடுத்த படம் சுமாரான வெற்றியை கொடுத்து திருப்தி அடைந்தனர்.

ரெட்ரோ, குட் பேட் அக்லி

அஜித்துக்கு, விடாமுயற்சி படம் கைவிட்டாலும் குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு அஜித் ரசிகர்கள் அப்படத்தை கொண்டாடினர். அதேபோல் சூர்யாவுக்கு கங்குவா படம் படுமோசமான தோல்வியை கொடுத்ததோடு போட்ட பட்ஜெட் காசு கூட எடுக்க முடியாமல் திணறியது. ஆனால் அதன்பின் வெளியான ரெட்ரோ படம் நல்ல வெற்றியை கொடுத்தாலும் மிகப்பெரிய லாபத்தை கொடுக்காமல் சராசரியான லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது.

இப்படியொரு சூழலில் குட் பேட் அக்லி, ரெட்ரோ ஆகிய இரு படங்கள் இன்னும் சாட்டிலைட் உரிமைக்கு விற்கப்படவில்லையாம். அஜித்தின் விடாமுயற்சி படத்தினை சன் டிவி கைப்பற்றி ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு ஒளிப்பரப்பு செய்தனர். ஆனால் டிஆர்பியில் மந்தமான புள்ளிகளை பெற்றது.

துண்டைப்போட்ட தயாரிப்பாளர்கள்

குட் பேட் அக்லி படத்தையும் சன் டிவி தான் சாட்டிலைட் உரிமையை வாங்கியது, ஆனால் படம் வெளியான பின் ரத்து செய்துவிட்டதாம். ரெட்ரோ படமும் வெளியான இரு மாதமான நிலையில் தற்போது வரை சாட்டிலைட் உரிமை விற்கப்படவில்லையாம்.

இப்படங்களை கொண்டு நல்ல தொகையை கைப்பற்றலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்களுக்கு தான் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. சிறிய பட்ஜெட்டில் எடுத்த படங்களே சாட்டிலைட் உரிமை கிடைத்து விற்கப்பட்டுவிட்ட நிலையில், ரெட்ரோ மற்றும் குட் பேட் அக்லி படங்களின் சாட்டிலை விற்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை அளித்துள்ளது.